இவர் ஒரு இந்திய மானுடவியலாளர் மற்றும் தமிழ் மரபு எழுத்தாளர் ஆவார்.
இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.
தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரியமான ஆராய்ச்சிக்காக இவர் வெகு சிறப்பாக அறியப் படுகின்றார்.
இவர் சிலப்பதிகாரம் போன்ற காவியங்களின் வாயிலாக தமிழின் கலாச்சார நிலையை மறுவரையறை செய்தார்.
இவர் அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், அறியப்படாத தமிழகம், வழித் தடங்கள், சமயம், சமயங்களின் அரசியல், உரைகள், நாள் மலர்கள், மானுட வாசிப்பு, மரபும் புதுமையும் மற்றும் இதுவே ஜனநாயகம் உள்ளிட்ட 15ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.