தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் 2025
March 8 , 2025 27 days 97 0
தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டமானது, 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தற்போதுள்ள மொத்த மக்களவை இடங்களின் எண்ணிக்கையையும் அரசியலமைப்பு எல்லைகளையும் தக்க வைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசினை ஒருமனதாக வலியுறுத்தியது.
இந்தக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தில், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது, தமிழ்நாட்டில் உள்ள மொத்த இடங்களில் தற்போதுள்ள 7.18% இடங்கள் எந்த சூழ்நிலையிலும் குறைக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டது.
2001 ஆம் ஆண்டில், 84வது அரசியலமைப்பு திருத்தம் ஆனது 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரையில் தொகுதி வரையறையை முடக்கியது.
தற்போதைய மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு தக்க வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டிற்கானப் பிரதிநிதித்துவம் எட்டு இடங்கள் வரை குறைக்கப் படும்.
தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக அதிகரித்து, சதவீத அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப் பட்டால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 22 தொகுதிகள் வழங்கப்படும்.