TNPSC Thervupettagam

தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் 2025

March 8 , 2025 26 days 96 0
  • தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டமானது, 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தற்போதுள்ள மொத்த மக்களவை இடங்களின் எண்ணிக்கையையும் அரசியலமைப்பு எல்லைகளையும் தக்க வைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசினை ஒருமனதாக வலியுறுத்தியது.
  • இந்தக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தில், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது, தமிழ்நாட்டில் உள்ள மொத்த இடங்களில் தற்போதுள்ள 7.18% இடங்கள் எந்த சூழ்நிலையிலும் குறைக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டில், 84வது அரசியலமைப்பு திருத்தம் ஆனது 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரையில் தொகுதி வரையறையை முடக்கியது.
  • தற்போதைய மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு தக்க வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டிற்கானப் பிரதிநிதித்துவம் எட்டு இடங்கள் வரை குறைக்கப் படும்.
  • தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக அதிகரித்து, சதவீத அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப் பட்டால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 22 தொகுதிகள் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்