தொடர் உமிழ்வு கண்காணிப்பு அமைப்பு (CEMS) என்பது இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறைகளுக்கு அவசியமான, மிகவும் துல்லியமான மாசு கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான ஒரு முக்கியமான கருவியாகும்.
2014 ஆம் ஆண்டில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் மிகவும் பொதுவான மாசுக் கட்டுப்பாட்டு மையங்களின் 17 பிரிவுகளில் CEMS நிறுவப் படுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
சமீபத்தில் CSIR-NPLஆனது, NPLI CS (தேசிய இயற்பியல் ஆய்வகம்) மற்றும் CEMS அமைப்பிற்கான சோதனை வசதிகளுடன் தொடர்புடைய ஒரு சான்றிதழ் அளிப்பு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.
CEMS ஆனது TUV/MECERT மற்றும் அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையினால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
CSIR-NPL சான்றிதழ் செயல்முறையானது EN-15267 என்ற ஐரோப்பியத் தரநிலைகளை (பிரிவு 1, 2 மற்றும் 3) ஒன்றியுள்ளது.