TNPSC Thervupettagam

தொடர் சங்கிலி தொழில்நுட்பம்

June 5 , 2018 2239 days 1005 0
  • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது தன்னுடைய 2018 ஆம் ஆண்டின் டெலிகாம் வர்த்தகத் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் முன்னுரிமை ஒழுங்குமுறைகளில் (Telecom Commercial Communication Customer Preference Regulation, 2018) தொடர் சங்கிலித் தொழில் நுட்பத்தை (Blockchain Technology) பயன்படுத்த முன்மொழிவை வழங்கியுள்ளது.
  • வேண்டாத வர்த்தகத் தொடர்புகள் (Unsolicited Commercial Communication -UCC) அல்லது வேண்டாத அமைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் (spam calls and messages) போன்றவற்றினுடைய அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • தேவையற்ற வேண்டாத அழைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர் சங்கிலி தொழில் நுட்பத்தினை உலக நாடு ஒன்று பயன்படுத்துவது இதுவே முதன் முறையாகும்.
  • தொடர் சங்கிலி பயன்பாட்டினால் அனைத்துத் தகவல்களும் பதிவு செய்யப்படும். மேலும் வர்த்தகத் தொலைத்தொடர்புகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்குப் பல விருப்பத் தேர்வுகள் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்