சமீபத்தில் தேசியப் புள்ளியியல் அலுவலகமானது (NSO - National Statistical Office) 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலக்கட்டத்திற்கான தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வை (PLFS - Periodic Labour Force Survey) வெளியிட்டுள்ளது.
PLFS ஆனது 2017 ஆம் ஆண்டில் NSO ஆல் தொடங்கப்பட்ட கணினியை மையமாகக் கொண்ட இந்தியாவின் முதலாவது ஆய்வாகும்.
இது கிராமப்புறக் குடும்பங்களின் மீது வருடாந்திர அளவிலும் நகர்ப்புறக் குடும்பங்களின் மீது காலாண்டு அடிப்படையிலும் தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம், பணியாளர்கள் எண்ணிக்கை விகிதம், வேலையற்ற & வேலைவாய்ப்பற்ற விகிதம் போன்ற வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பற்ற குறிகாட்டிகளைக் கணித்து அது குறித்த தகவல்களைத் தருகின்றது.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2018-19 ஆம் காலக்கட்டத்தில் 5.8% ஆகக் குறைந்துள்ளது. இது 2017-18 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 6.1% ஆக இருந்தது.
நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதமானது 7.8%லிருந்து 7.7% ஆகக் குறைந்து உள்ளது.
கிராமப்புற வேலையின்மை விகிதமானது 5.3% யிலிருந்து 5 ஆகக் குறைந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்திடம் உள்ள மாதாந்திரத் தரவின்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் 7.87%லிருந்து 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் 23.48% என்ற அளவில் அதிகரித்து உள்ளது.