TNPSC Thervupettagam

தொட்டலத்தூர் பெருங்கற்காலத் தளம் – கர்நாடகா

October 13 , 2024 69 days 185 0
  • சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள தொட்டலத்தூர் பெருங்கற்கால புதைவிடப் பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கியுள்ளன.
  • கிராமத்தின் மேற்கில் ஒரு சிறிய குன்று மற்றும் அதை ஒட்டிய வயல்களில் இரும்புக் காலத்தை ஒத்த நூற்றுக்கணக்கான பெருங்கற்காலப் புதைவிடங்கள் உள்ளன.
  • இந்தப் புதைவிடங்கள் பெரிய பாறைகளால் ஆன வட்டங்களைக் கொண்டிருப்பதால் இக்காலம் "பெருங்கற்காலம்" என்று அழைக்கப்படுகின்றது.
  • இக்காலத்தில் இரும்புத் தொழில்நுட்பமானது பயன்பாட்டுக்கு வந்ததால் இது இரும்புக் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • தென்னிந்தியாவில், இந்த காலமானது கி.மு. 1200 முதல் கி.பி. 300 வரையிலான கால இடைவெளியில் பரவலாக காணப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்