தொற்றா நோய்களின் கட்டுப்பாடு குறித்த UNIATF விருது
September 30 , 2020 1396 days 546 0
கேரள மாநிலமானது நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG - Sustainable development goals) தொடர்பான தொற்றா நோய்கள் (NCD : Non-communicable diseases) குறித்த தனது “தலைசிறந்த பங்களிப்பை” ஆற்றியதற்காக ஐக்கிய நாடுகள் விருதினை வென்று உள்ளது.
இந்த விருதானது NCD-ன் கட்டுப்பாடு மற்றும் அவற்றைத் தடுத்தல், மனநலம் மற்றும் மிகப் பரவலான NCD தொடர்பான SDG ஆகியவற்றில் 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்துறை செயல்பாடுகளை அங்கீகரிக்கின்றது.
ஐக்கிய நாடுகளினால் (United Nations Interagency Task Force on the Prevention and Control of Non-communicable Diseases - UNIATF) இந்த வருடாந்திர விருதிற்காக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மாநிலம் கேரளா ஆகும்.
உலகில் சுகாதாரம் குறித்த 7 சிறந்த அமைச்சகங்களிடையே கேரளாவும் ஒன்று ஆகும்.