TNPSC Thervupettagam

தொற்றாத நோய்கள் பற்றிய உலக சுகாதார அமைப்பின் அறிக்கை

September 27 , 2022 791 days 419 0
  • உலக சுகாதார அமைப்பானது  'புலப்படாத எண்ணிக்கைகள் - தொற்றாத நோய்களின் உண்மையான மதிப்பீடு' என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • ஒவ்வோர் இரண்டு வினாடிகளிலும், 70 வயதிற்குட்பட்ட ஒருவர் தொற்றாத நோயால் (NCD) உயிரிழக்கிறார்.
  • அந்த இறப்புகளில் 86 சதவீதம் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.
  • இந்தியாவில், 2019 ஆம் ஆண்டில் பதிவான மொத்த இறப்புகளில் 66 சதவீதம் தொற்றாத நோயால் ஏற்பட்டவையாகும்.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது இதற்காக ஒரு இணையத் தளத்தினையும் தொடங்கி உள்ளது.
  • இந்த இணையதளம் ஆனது 194 நாடுகளுக்காக முதன்முறையாக தொற்றாத நோய்களுடன் தொடர்புடைய அனைத்து உலக சுகாதார அமைப்பின் தரவுகளையும் ஒன்றாக இணைக்கிறது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 60.46 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றாத நோயால் இறந்துள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான 25.66 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் இருதய நோய்களால் ஏற்பட்டுள்ளன.
  • 11.46 லட்சம் பேர் நாள்பட்ட சுவாச நோய்களால் இறந்துள்ளனர்.
  • இந்தியாவில் புற்றுநோயால் 9.20 லட்சம் நபர்களும், 3.49 லட்சம் பேர் நீரிழிவு நோயினாலும் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்