TNPSC Thervupettagam

தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றிய உலகளாவிய அறிக்கை 2024

December 6 , 2024 16 days 68 0
  • 71% நாடுகளில் தற்போது தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (IPC) திட்டம் செயலில் இருந்தாலும், 2023-2024 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் குறைந்தபட்ச IPC நிபந்தனைகள் அனைத்தையும் வெறும் 6% நாடுகள் மட்டுமே பூர்த்தி செய்துள்ளன.
  • உலக சுகாதார அமைப்பின் ஒரு உலகளாவியச் செயல் திட்டம் மற்றும் IPC மீதான கண்காணிப்புக் கட்டமைப்பில், 2030 ஆம் ஆண்டிற்குள் 90 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கை அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இது மிகவும் பின் தங்கியுள்ளது.
  • மருத்துவமனையில் நன்கு சிகிச்சை பெற்ற அனைத்து வகை சீழ்த்தொற்று (செப்சிஸ்) பாதிப்புகளில் நான்கில் ஒன்று (23.6%) சுகாதாரப் பாதுகாப்புடன் தொடர்புடையது.
  • வயது வந்தோருக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) சிகிச்சை பெறும் உறுப்பு செயலிழப்புடன் கூடிய செப்சிஸ் தொற்றின் அனைத்து வகையானப் பாதிப்புகளிலும் சுமார் பாதி (48.7%) அளவிலான பாதிப்புகள் மருத்துவமனை வழியே பெறப்பட்டவை ஆகும்.
  • ஒவ்வோர் ஆண்டும், சுமார் 7.7 மில்லியன் உயிரிழப்புகள் உலகளவில் இப்பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படுகின்றன.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் திறன் கொண்ட மருத்துவமனையில் ஏற்படும் நோய்த் தொற்றுகளின் உலகளாவிய எண்ணிக்கையானது ஆண்டுதோறும் சுமார் 136 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆண்டுதோறும் சுமார் 4.95 மில்லியன் உயிரிழப்புகள் பாக்டீரிய AMR வகை உடன் தொடர்புடையவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்