TNPSC Thervupettagam

தொலைதூரக் கோள்களின் வளிமண்டலத்தில் குவார்ட்ஸ் படிகங்கள்

December 18 , 2023 215 days 165 0
  • WASP-17b என்ற புறக்கோளின் உயர்மட்ட மேகங்களில் குவார்ட்ஸ் நுண் படிகங்கள் இருப்பதை வானியலாளர்கள் கண்டறிந்தனர்.
  • WASP-17b என்பது நமது கிரகத்தில் இருந்து சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு "வெப்பமான வியாழன்" புறக்கோள் ஆகும்.
  • புறக்கோள்களின் வளிமண்டலத்தில் சிலிக்கா துகள்கள் கண்டறியப்படுவது இது முதல் முறையாகும்.
  • சிலிக்கேட்டுகள் சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் நிறைந்த தாதுக்கள் ஆகும் என்ற நிலையில் அவை பூமி மற்றும் சந்திரனின் நிறையில் பெரும்பங்கினையும், சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற பாறைப் பொருள்களில் பெரும்பங்கினையும் கொண்டு உள்ளன.
  • அவை அண்டம் முழுவதும் அதிகளவில் காணப் படுகின்றன.
  • ஆனால் புறக்கோள்கள் மற்றும் பழுப்பு நிறக் குறுங்கோள்களின் வளிமண்டலங்களில் இதுவரையில் கண்டறியப்பட்ட சிலிக்கேட் துகள்கள் ஒலிவின் மற்றும் பைராக்ஸீன் போன்ற மெக்னீசியம் நிறைந்த சிலிக்கேட்டுகளால் ஆனது.
  • குவார்ட்ஸ் என்பது ஒரு தூய சிலிக்கான் டை ஆக்சைடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்