தொலைதூரக் கோள்களின் வளிமண்டலத்தில் குவார்ட்ஸ் படிகங்கள்
December 18 , 2023 343 days 217 0
WASP-17b என்ற புறக்கோளின் உயர்மட்ட மேகங்களில் குவார்ட்ஸ் நுண் படிகங்கள் இருப்பதை வானியலாளர்கள் கண்டறிந்தனர்.
WASP-17b என்பது நமது கிரகத்தில் இருந்து சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு "வெப்பமான வியாழன்" புறக்கோள் ஆகும்.
புறக்கோள்களின் வளிமண்டலத்தில் சிலிக்கா துகள்கள் கண்டறியப்படுவது இது முதல் முறையாகும்.
சிலிக்கேட்டுகள் சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் நிறைந்த தாதுக்கள் ஆகும் என்ற நிலையில் அவை பூமி மற்றும் சந்திரனின் நிறையில் பெரும்பங்கினையும், சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற பாறைப் பொருள்களில் பெரும்பங்கினையும் கொண்டு உள்ளன.
அவை அண்டம் முழுவதும் அதிகளவில் காணப் படுகின்றன.
ஆனால் புறக்கோள்கள் மற்றும் பழுப்பு நிறக் குறுங்கோள்களின் வளிமண்டலங்களில் இதுவரையில் கண்டறியப்பட்ட சிலிக்கேட் துகள்கள் ஒலிவின் மற்றும் பைராக்ஸீன் போன்ற மெக்னீசியம் நிறைந்த சிலிக்கேட்டுகளால் ஆனது.
குவார்ட்ஸ் என்பது ஒரு தூய சிலிக்கான் டை ஆக்சைடு ஆகும்.