TNPSC Thervupettagam

தொலைதூரத்தில் உள்ள சூரிய மண்டல பொருள்

December 26 , 2018 2161 days 673 0
  • நமது சூரிய மண்டலத்தில் 2018 VG18 என்று அறியப்படும் மிக தொலைதூரத்தில் உள்ள பொருளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு "ஃபார்அவுட்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • முதன்முதலில் சூரியனிலிருந்து 100 AU (Astronomical Unit- வானவியல் அலகு) தொலைவில் கிட்டத்தட்ட 120 AU அல்லது 11 பில்லியன் மைல்கள் தூரத்தில் கண்டறியப்பட்ட பொருள் இதுவேயாகும்.
  • 1 AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் ஆகும்.
  • சூரியலிருந்து 80 AU தொலைவில் உள்ள, "தி கோப்ளின்" என்றழைக்கப்படும் மற்றொரு தொலைதூர பொருளையும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • சூரியனிலிருந்து இரண்டாவது மிக தொலைதூர பொருளாக கண்டறியப்பட்ட ஏரிஸ் 96 AU தொலைவில் உள்ளது.
  • குறுங்கோளான புளுட்டோ தற்போது 34 AU தொலைவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்