TNPSC Thervupettagam

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கிடையேயான பயன்பாட்டுக் கட்டணம்

October 11 , 2019 1874 days 694 0
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களிடம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கிடையேயான பயன்பாட்டுக் கட்டணத்தை (Interconnect Usage Charge - IUC) வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
  • இந்தக் கட்டணமானது நிமிடத்திற்கு 6 பைசா என்ற விகிதத்தில் இருக்கும்.
  • IUC என்பது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் உபகரணங்கள், அமைப்புகள் மற்றும் சேவைகளை பிற தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைக்கும் ஒரு ஏற்பாட்டைக் குறிக்கின்றது.
IUC கட்டணங்கள்
  • தற்போது இந்தியாவில் கம்பியற்ற முறையில் தொலைத் தொடர்புகளை ஏற்படுத்தும் சாதனங்களுக்கு மட்டுமே IUC கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
  • இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (TRAI - Telecom Regulatory Authority of India (TRAI) IUC கட்டண விகிதங்களை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் IUC கட்டணத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர TRAI விரும்புகின்றது.
  • அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் VoLTEக்கு மாறும் என்று கருதப்பட்டதால் TRAI ஆனது IUCஐ முடிவுக்குக் கொண்டு வருகின்றது.
  • ஜியோ முற்றிலும் ஒரு VoLTE வலையமைப்பு (network) ஆகும். ஆனால் வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்களது பழைமையான 2G மற்றும் 3G வலையமைப்புகளிலும் தொடர்ந்து சேவைகளை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்