TNPSC Thervupettagam

தொலைத்தொடர்பு மசோதா, 2023

December 22 , 2023 211 days 213 0
  • மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு மசோதாவானது, கடந்த 138 ஆண்டுகளில் முதல் முறையாக தொலைத்தொடர்புச் சட்டத்தை விரிவான முறையில் மீண்டும் திருத்தி எழுத முன்மொழிகிறது.
  • இது 1885 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு சட்டத்தை மாற்றியமைக்கிறது.
  • தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் “உடல் அங்க அடையாள அங்கீகாரம்” பெற வேண்டும் என்று இந்த மசோதா வலியுறுத்துகிற நிலையில், அதற்கான வடிவம் பின்னர் அறிவிக்கப்படும்.
  • தொலைத்தொடர்பு தகவல்தொடர்புகளின் சட்டப்பூர்வத் தலையீடுகள் அல்லது கண்காணிப்பு முந்தைய சட்டத்தின் படி மேற்கொள்ளப்படும்.
  • பொது அவசரநிலை அல்லது பாதுகாப்புச் சிக்கல்களின் போது ஒரு தொலைத் தொடர்பு வலையமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு கைப்பற்றுவதற்கு இந்த மசோதா அனுமதிக்கிறது.
  • பார்தி நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஒன்வெப் மற்றும் அமெரிக்காவில் அமைந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை வழங்குநர்களுக்கு அவர்கள் அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கான வாய்ப்பினை இந்த மசோதா வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்