தொல்காப்பியத்தின் இந்தி மொழிபெயர்ப்பினையும், தமிழ் செம்மொழி இலக்கியத்தின் 9 படைப்புகளின் கன்னட மொழிபெயர்ப்பினையும் கல்வித்துறை இணை அமைச்சர் சமீபத்தில் வெளியிட்டார்.
தமிழ் இலக்கியமானது தமிழ்க் கவிஞர்களின் கூட்டத்தின் (சங்கம்) பெயரிடப்பட்ட சங்க காலம் சார்ந்த நூல்களை உள்ளடக்கியதாகும்.
தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் என்ற நூலானது தமிழ் இலக்கியப் படைப்பின் ஆரம்ப காலப் படைப்பாகவே கருதப்படுகிறது.
இது தமிழ் இலக்கணத்தினைக் குறித்த ஒரு படைப்பாக இருந்தாலும், அந்தக் கால அரசியல் மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் பற்றிய நுண்ணறிவுகளையும் வழங்குகிறது.