சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் ஜான் மார்ஷலின் உருவச் சிலையை தமிழக அரசு நிறுவவுள்ளது.
1902 முதல் 1928 ஆம் ஆண்டு வரை இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) தலைமை இயக்குநராக மார்ஷல் பணியாற்றினார்.
இந்தக் காலத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை உள்ளடக்கிய இரண்டு முக்கிய நகரங்களான ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன.
100 ஆண்டுகளுக்கு முன்பு, 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று, சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.