தமிழ்நாடு தொல்லியல் துறையானது மேலும் 7 தளங்களில் அகழாய்வுகளை மேற்கொள்ளவும் 2 இடங்களில் நிகழ்நேர ஆய்வுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்து உள்ளது.
மாநிலத் தொல்லியல் துறை மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் 10 அகழாய்வுத் திட்டங்களுக்கும் மேற்பட்ட திட்டங்களை தமிழ்நாடு மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த அகழாய்வுகள் பின்வரும் இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகலை, கொற்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை
அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் மாளிகைமேடு
புதிய கற்காலத் தளத்தைக் கண்டறிவதற்காக ஒரு நிகழ்நேர (துறைசார்) ஆய்வானது கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவாண்ணாமலை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மற்றொரு துறைசார் ஆய்வானது தாமிரபரணி நதி நாகரிகத்தைக் கண்டறிவதற்காக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சர்மா பாரம்பரியக் கல்வி மையமானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்ராயன்பாளையத்தில் அகழாய்வை மேற்கொள்ள அனுமதி கோரியுள்ளது, அழகப்பா பல்கலைக்கழகமானது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தகரையில் அகழாய்வை மேற்கொள்ள தனது பரிந்துரையைச் சமர்ப்பித்துள்ளது.
தமிழ்ப் பல்கலைக்கழகமானது கோயம்புத்தூரில் உள்ள மூலப் பாளையத்தில் அகழாய்வை மேற்கொள்வதற்கான பரிந்துரையையும் மதராஸ் பல்கலைக் கழகமானது வேலூர் மாவட்டத்தில் உள்ள வாசலையில் அகழாய்வை மேற்கொள்வதற்கான பரிந்துரையையும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகமானது புதுக்கோட்டையில் உள்ள பொற்பனைக் கோட்டையில் அகழாய்வை மேற்கொள்வதற்கான அனுமதியையும் கோரியுள்ளன.