TNPSC Thervupettagam

தொல்லை தரக்கூடிய இனமாக குரங்கு அறிவிப்பு

February 25 , 2019 1973 days 546 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 மாவட்டங்களின் 91 வட்டங்கள் மற்றும் துணை வட்டங்களில் அடுத்த ஒரு வருடத்திற்கு குரங்குகள் தொல்லை தரக்கூடிய இனங்களாக (வெர்மின்) மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • இது தொடர்பாக மத்திய அரசு பிப்ரவரி 14, 2019 அன்று அடுத்த ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டிருக்கின்றது.
  • மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் இந்த குரங்குகள் செயல்படுவதால் அவற்றை தொல்லை தரக்கூடிய உயிரினங்களாக (வெர்மின்) அறிவிப்பது அவசியம் என்று மத்திய அரசு வலியுறுத்துகின்றது.
வெர்மின் என்பதன் மீதான விளக்கம்
  • வெர்மின் என்பது நோய்களைப் பரப்பக் கூடிய அல்லது பயிர்கள் மற்றும் கால்நடைகளைத் தாக்கி அழிக்கக்கூடிய தொல்லை மிருகங்கள் அல்லது பூச்சியினங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது.
  • இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் 62-வது பிரிவு வனவிலங்குகளின் ஒரு பட்டியலை வெர்மின் வகை என அறிவித்து அவற்றை வதை செய்வதற்காக மாநில அரசுகள் மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதற்கு அதிகாரமளிக்கின்றது.
  • இவ்வாறான வனவிலங்குகள் அச்சட்டத்தின் ஐந்தாவது பட்டியலில் சேர்க்கப்பட்டு, சட்டத்தின்கீழ் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்