தொழிற்சாலையால் உற்பத்தி செய்யப்படும் மாறுபக்கக் கொழுப்புகளை நீக்குதல்
February 4 , 2024 295 days 244 0
உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, தொழிற்துறையில் உற்பத்தி செய்யப்படும் மாறுபக்க கொழுப்பு அமிலங்களை (iTFA) அகற்றுவதில் முன்னேற்றம் பெற்றதற்கான சான்றிதழ்களை ஐந்து நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழ்களைப் பெற்ற நாடுகள் டென்மார்க், லிதுவேனியா, போலந்து, சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்து ஆகியனவாகும்.
2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகளாவிய உணவு விநியோகத்திலிருந்து மாறுபக்க கொழுப்பு அமிலங்களை முற்றிலுமாக அகற்றுதல் என்ற உலக சுகாதார அமைப்பின் இலட்சியமிகு இலக்கு முழுமையாக அடையப்படவில்லை.
2023 ஆம் ஆண்டில் மட்டும் எகிப்து, மெக்சிகோ, மால்டோவா, நைஜீரியா, வடக்கு மாசிடோனியா, பிலிப்பைன்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய ஏழு நாடுகள் மாறுபக்க கொழுப்பு அமிலங்களை அகற்றுவதற்கான புதிய மற்றும் மிகச் சிறந்த நடைமுறைக் கொள்கைகளை அமல்படுத்தின.
தற்போதைய நிலையில், 53 நாடுகள் உணவில் உள்ள மாறுபக்க கொழுப்பு அமிலங்களை நீக்குவதற்கான மிக பயனுள்ள சிறந்த நடைமுறைக் கொள்கைகளைக் கொண்டுள்ளன.
இந்தக் கொள்கைகள் ஆண்டுதோறும் சுமார் 183,000 உயிர்களைக் காப்பாற்றும் என மதிப்பிடப் பட்டுள்ளது.