TNPSC Thervupettagam

தொழிலக சூரியஒளி சிறு மின் விநியோக அமைப்பு - குஜராத்

May 12 , 2018 2422 days 795 0
  • சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் பன்னாட்டு நிறுவனமான ABB குஜராத்திலுள்ள வதோதராவிலுள்ள தன்னுடைய உற்பத்தித் கூடத்தில் முதல் இந்திய தொழிலக சூரியஒளி சிறு மின் விநியோக அமைப்பினை துவங்கியுள்ளது.
  • ஒருங்கிணைக்கப்பட்ட மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் கூடிய சிறு மின் விநியோக அமைப்பானது, திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத மின்சார நிறுத்தங்களை (Power outages) தவிர்ப்பதற்கு உதவி புரியும்.
  • சிறு மின்விநியோக அமைப்பின் மேல் பகுதியிலுள்ள ஒளிமின்னழுத்த களம் (Photo voltaic field) மற்றும் இவ்வமைப்பின் மின்கலன் - ஆற்றல் சேமிப்பு அமைப்பு ஆகியவை தொழிற்சாலையின் உற்பத்திக்கு உதவிபுரிவதோடு பசுமை ஆற்றலை வழங்குவதற்கும் இயலச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்