இந்த அறிக்கையானது ‘Navigating Tomorrow: Mastering Skills in a Dynamic Global Labor Market’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியத் தொழில்துறை வல்லுநர்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான நபர்கள் திறமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தீவிரமாக நாடுகின்றனர்
திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் அரசாங்கங்களின் திறன் மீதான உலகளாவிய நம்பிக்கை 20 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் 15 சதவீதம், ஐக்கியப் பேரரசில் 12 சதவீதம் என்ற மிக குறைவான நம்பகத்தன்மை அளவே பதிவாகி உள்ளன.
இந்தியாவில் இந்தக் கணக்கெடுப்பில் பங்கெடுத்தவர்கள், தொழிலாளர்களின் பெரும் மேம்பாட்டில் தனியார் துறையின் பங்கினை வலியுறுத்தி, வணிகங்களில் 49 சதவீத நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.