TNPSC Thervupettagam

தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளி குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கை

October 29 , 2020 1400 days 411 0
  • உலகின் பெண்கள் : போக்குகள் மற்றும் புள்ளியியல் தகவல்கள் என்று  தலைப்பு கொண்ட இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் – டெசா (UN DESA) அமைப்பினால் வெளியிடப் பட்டு உள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, உலகம் முழுவதும் பாலினச் சமத்துவமானது இன்னமும் எட்டப் படாத ஒரு இலக்காக உள்ளது. எந்தவொரு நாடும் இதனை இன்னும் அடைய வில்லை.
  • இந்த அறிக்கையானது 1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, கடந்த 25 ஆண்டுகளாக பெண்களின் உலகளாவிய நிலை குறித்த ஒரு மெய்மை நிலைமையை அளிக்கின்றது.
  • தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளியானது 1995 ஆம் ஆண்டில் இருந்த அதே நிலையில் இன்றும் தொடர்கின்றது.
  • சந்தையில் தொழிலாளர் சக்தியின் பங்கேற்பில் மிகப்பெரிய பாலின இடைவெளியானது முதன்மையான பணியாற்றும் வயதில் (24-54) காணப் படுகின்றது.
  • இந்தியாவில், தொழிலாளர் சந்தையில் ஆண்-பெண் தொழிலாளர் சக்தியின் பங்கேற்பு விகிதமானது 50%  என்ற விருப்ப இலக்கிற்கு மாறாக 2019 ஆம் ஆண்டில் 29.80 ஆக உள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்