தொழிலாளர் பற்றாக்குறையை குறைப்பதற்காக ஏப்ரல் 2019ல் இருந்து அயல்நாட்டவருக்கு நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதற்கு ஜப்பானிய பாராளுமன்றம் (தேசிய டயட்) ஒரு புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொழிலாளர் நெருக்கடியை எதிர்கொள்ளும் துறைகளில் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு இரண்டு புதிய வகை அனுமதி சீட்டுக்களை (விசா) உருவாக்குகிறது.
முதல் வகை - தொழிலாளர்கள் (குறைந்த திறன்) 5 ஆண்டுகள் வரை தங்க முடியும். ஆனால் அவர்களால் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர இயலாது.
2-வது பிரிவு - திறமையான அயல் நாட்டவர்கள் அவர்களுடன் வசிக்க உறவினர்களை அழைத்து வரக் கூடிய தகுதியுடையவர்கள் ஆவார்.