TNPSC Thervupettagam

தொழில்துறை உறவுகள் குறியீடு 2020

November 4 , 2020 1485 days 663 0
  • தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020 என்பதற்கான வரைவு விதிகளைத் தொழிலாளர் அமைச்சகமானது சமீபத்தில் அறிவித்தது.
  • இந்த விதிகள் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் செயல்படுத்தப்பட உள்ளன.
  • இந்த விதிகள் பின்வருவனவற்றை மாற்றி அமைக்கின்றன,
    • தொழில்துறைத் தீர்ப்பாயம் (மத்திய நடைமுறை) விதிகள், 1949
    • தொழில்துறைத் தீர்ப்பாயம் (மத்திய நடைமுறை) விதிகள், 1954
    • தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலை ஆணை) மத்திய விதிகள், 1946 மற்றும்
    • தொழில்துறைத் தகராறுகள் (மத்திய அரசு) விதிகள், 1957.
  • இந்தப் புதிய விதிகளின் கீழ், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அரசாங்க ஒப்புதலைப் பெற வேண்டும்.
  • முன்னதாக, இந்த வரம்பு 100 ஊழியர்களாகும்.
  • மேலும், நிறுவனங்களை மூடுவது என்றால் அரசாங்கத்திடம் 60 அல்லது 90 நாட்களுக்கு முன் ஒப்புதல் கோரிய பின்னரே செயல்படுத்தப் பட வேண்டும்.
  • இது தொழிற்சங்கங்களுக்குச் சந்தாக் கட்டணங்களையும் பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்