தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் மூலம் (IIP) அளவிடப்படுகின்ற, இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தியானது, 21 மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்தத் தரவு ஆனது தேசிய புள்ளியியல் அலுவலகத்தினால் (NSO) வெளியிடப் பட்டு உள்ளது.
ஒட்டு மொத்தத் தொழில்துறை உற்பத்தியானது ஜூலை மாதத்தில் 4.7 சதவீதமாகவும், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10.9 சதவீதமாகவும் வளர்ந்துள்ளது.
சுரங்க உற்பத்தியானது ஆகஸ்ட் மாதத்தில் 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என்ற நிலையில் இது ஜூலை மாதத்தில் 3.8 சதவீதமாக இருந்தது மற்றும் முந்தைய ஆண்டில் 12.3 சதவீதமாக இருந்தது.
ஜூலை மாதத்தில் 7.9 சதவீதமாக இருந்த மின் உற்பத்தியும், அதற்கு முந்தைய ஆண்டு பதிவான 15.3 சதவீதத்துடன் ஒப்பிடச் செய்யும் போது, ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 3.7 சதவீதமாக அது குறைந்துள்ளது.
IIP தரவுகளின்படி, துறை ரீதியாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 23 உற்பத்தி துறைகளுள் 11 துறைகளின் உற்பத்தியில் குறைவு பதிவாகியுள்ளது.