TNPSC Thervupettagam

தொழில்துறைகளின் வகைப்பாடு – CPCB

April 11 , 2025 13 days 69 0
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை ‘நீலம்’ என்ற புதியதொரு நிற வகைப்பாட்டுடன், தொழில்துறைகளின் திருத்தப் பட்ட வகைப்பாட்டை ஏற்க உத்தரவிட்டுள்ளது.
  • அவை கழிவு நிரப்பு நிலப்பரப்புகளைப் பராமரிப்பது அல்லது உயிரி முறைக் கழிவுப் பிரித்தெடுப்பு ஆகியவற்றில் ஈடுபடுவது போன்ற "மிக அத்தியாவசியச் சுற்றுச்சூழல் சேவைகள்" என்று அழைக்கப்படுகின்றன.
  • "நீல வகைத் துறை" என்பது தொழில்துறைகள் மேலும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான செயல்படுவதற்கான ஒப்புதலாகும்.
  • திருத்தப்பட்ட ஒரு முறையின்படி, மாசுக் குறியீட்டின் பின்வரும் வரம்புகளின் மீதான அடிப்படையில் தொழில் துறையின் வகையானது தீர்மானிக்கப்படுகிறது : சிவப்பு: மாசுபாட்டுக் குறியீடு-PI> 80; ஆரஞ்சு: 55PI<80; பச்சை: 25
  • வெள்ளை வகைத் தொழில்துறைகள் குறைந்தபட்ச மாசுபாட்டுத் திறன் கொண்டவை என வரையறுக்கப்படுகின்றன.
  • மாசுபடுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு தொழில்துறைகளை மறுவகைப் படுத்துவதற்காக CPCB ஆனது 2016 ஆம் ஆண்டில் இந்த வகைப்பாட்டை அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்