2025 ஆம் ஆண்டிற்கான தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு அமைப்பினால் (UNCTAD) வெளியிடப் பட்டுள்ளது.
எல்லைப்புறத் தொழில்நுட்பங்களுக்கான தயார்நிலை குறியீட்டில், 2022 ஆம் ஆண்டில் 48வது இடத்தில் இருந்த இந்தியா 2024 ஆம் ஆண்டில் 36வது இடத்தைப் பிடித்து அதன் நிலையை மேம்படுத்தியுள்ளது.
எல்லைப்புறத் தொழில்நுட்பங்களின் மீதான ஒரு நாட்டின் தயார்நிலையை அளவிடும் உலகளாவியக் குறியீட்டில் இடம் பெற்ற 170 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் உள்ளது.
இந்தியா தகவல் மற்றும் தொலைத்தொடர்பு (ICT) பிரிவில் 99வது இடத்திலும், திறன்கள் பிரிவில் 113வது இடத்திலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மூன்றாவது இடத்திலும், தொழில்துறைத் திறனில் பத்தாவது இடத்திலும், நிதித்துறையில் 70வது இடத்திலும் உள்ளது.
2023 ஆம் ஆண்டில், சுமார் 67 பில்லியன் டாலர்கள் அல்லது உலகளாவியச் செயற்கை நுண்ணறிவில் (AI) தனியார் முதலீட்டில் சுமார் 70% என்ற முதலீட்டுடன், செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் தனியார் துறை முதலீட்டின் அடிப்படையில் அமெரிக்க நாடு உலகில் முன்னணியில் உள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் அதிக முதலீடுகளைக் கொண்ட ஒரே நாடாக சீனா 7.8 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் இந்தியா 1.4 பில்லியன் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவில் (AI) பெரும் குறிப்பிடத்தக்கத் தனியார் முதலீடுகளைக் கொண்ட உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
அமெரிக்காவானது அதிக அளவு கிட்ஹப் (GitHub) தளத்தில் மென்பொருள் உருவாக்கும் நிபுணர்களைக் கொண்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து இந்தியாவும் சீனாவும் இடம் பெற்று உள்ளன.
இந்தியாவில் சுமார் 13 மில்லியன் மற்றும் பிரேசிலில் நான்கு மில்லியன் திறன் மிக்க நபர்களுடன் அதிக நிபுணத்துவம் கொண்டவையாக உள்ளன.
காற்றாலை மீதான ஆற்றலில் ஜெர்மனியும், நானோ தொழில்நுட்பத்தில் இந்தியாவும், மின்சார வாகனங்கள் நுட்பங்களில் ஜப்பானும் 5ஜி மீதான தொழில்நுட்பத்தில் தென் கொரியக் குடியரசும் அதிக நிபுணத்துவம் பெற்றுள்ளன.