தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் பற்றிய அறிக்கை 2023
March 30 , 2023 606 days 329 0
இது ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான மாநாட்டு அமைப்பினால் (UNCTAD) வெளியிடப்பட்டது.
வளர்ந்து வரும் நாடுகளை விட வளர்ச்சி பெற்ற நாடுகள் இந்தப் பசுமைத் தொழில் நுட்பங்களால் அதிகம் பயனடைகின்றன என்பதோடு இது உலகப் பொருளாதாரச் சமத்துவமின்மையை இன்னும் ஆழமாக்கும்.
2020 ஆம் ஆண்டில் 1.5 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவிலிருந்த பசுமைத் தொழில் நுட்பங்களின் சந்தை மதிப்பு ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 9.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ளச் சந்தையாக மாறும்.
இந்த ஆண்டு அறிக்கையில் 'எல்லைப்புற தொழில்நுட்பத் தயார்நிலைக் குறியீடு' சேர்க்கப் பட்டுள்ளது.
இதன்படி, தொடர்ச் சங்கிலித் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் மற்றும் சூரிய சக்தி போன்ற முன்னிலைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் சில வளர்ந்து வரும் நாடுகளுக்கு மட்டுமே உள்ளது.
இதில் அதிக வருமானம் கொண்ட பொருளாதாரம் கொண்ட, குறிப்பாக அமெரிக்கா, சுவீடன், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் பிரேசில் - 40வது இடத்திலும், ரஷ்யக் கூட்டமைப்பு 31வது இடத்திலும், இந்தியா 46வது இடத்திலும், சீனா 35வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 56வது இடத்திலும் உள்ளன.