TNPSC Thervupettagam

தொழில்முறைப் படிப்புகளில் மாநில அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு

August 28 , 2021 1245 days 833 0
  • மாநில அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்” 7.5% இட ஒதுக்கீட்டினை வழங்குவதற்கான ஒரு மசோதாவினை தமிழக சட்டசபை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இது பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் மற்றும் அரசுக் கல்லூரிகளில் அளிக்கப்படும் பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் மற்றும் இதர தொழில்முறைப் படிப்புகளில் இளங்கலைப் பட்டப் படிப்பிற்கான சேர்க்கையில் செயல்படுத்தப்படும்.
  • இந்த இட ஒதுக்கீட்டினைப் பெற மாணாக்கர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழகத்திலுள்ள மாநில அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்றிருக்க வேண்டும்.
  • அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இடையே ஒரு உண்மையான சமத்துவ நிலையைக் கொண்டு வருவதற்காக வேண்டி ஓர் உறுதிபாட்டு நடவடிக்கையினை மேற்கொள்ள இந்த மசோதா முயல்கிறது.
  • அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆகியோரிடையே நடைமுறையில் சமத்துவமின்மைநிலவி வருவது நீதிபதி D. முருகேசன் குழு சமர்ப்பித்த ஒரு அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்