உலக சுகாதார அமைப்பின் (WHO) அதிகாரப்பூர்வச் சரிபார்ப்பு சான்றிதழைப் பெற்று, தொழுநோயை ஒழித்த உலகின் முதல் நாடாக ஜோர்டான் திகழ்கிறது.
இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு, ஒரு நாட்டில் பதிவான தொழுநோயின் பாதிப்பு எண்ணிக்கையானது 10,000 மக்கள்தொகைக்கு 1 பேருக்கும் கீழே குறைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
அந்த நோயைக் கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்கும், பரவாமல் தடுப்பதற்கும் பயனுள்ள அமைப்புகளும் இருக்க வேண்டும்.
தொழுநோய் என்பது ஹேன்சன் நோய் என்றும் அழைக்கப்படுவதோடு இது மைக்கோ பாக்டீரியம் லெப்ரேயினால் ஏற்படும் ஒரு நாள்பட்ட தொற்று நோயாகும்.
இந்த நோயானது தோல், புற நரம்பு மண்டலம், மேல் சுவாசக் குழாயின் சீதமென்சவ்வு (மியூகோசல்) மேற்பரப்புகள் மற்றும் கண்களைப் பாதிக்கிறது.