TNPSC Thervupettagam

தொழுநோய்க்கான புதிய மும்மருந்து வழங்கீடு

January 28 , 2024 174 days 232 0
  • 2027 ஆம் ஆண்டிற்குள் உள் தேசிய அளவில் (நிர்வாகப் பிரிவுகள்) தொழுநோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தொழுநோய்க்கான புதிய சிகிச்சை முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தொழுநோய் பரவுவதைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் மேற்கொண்டு வருகிறது.
  • ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இரண்டு மருந்து வழங்கீட்டு முறைக்கு பதிலாக பாசி-பேசிலரி (PB) பாதிப்புகளுக்கு மும்மருந்து வழங்கீட்டு விதிமுறைகளை அறிமுகப் படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் இந்த திருத்தியமைக்கப்பட்ட மருந்து வழங்கீட்டு முறைகளை பின்பற்ற உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • எனவே, அனைத்து மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் தொழுநோய் எதிர்ப்பு மருந்துகளைப் பெறுவதற்கான கோரிக்கைகளை 12 மாதங்களுக்கு முன்பே அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் தொழுநோயின் திருத்தப்பட்ட வகைப்பாடு மற்றும் பாசி பேசிலரி மற்றும் மல்டி-பேசிலரி (MB) பாதிப்புகளுக்கான சிகிச்சை முறை ஆகியவை அதே தேதியில் இருந்து செயல்படுத்தப்படும்.
  • உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் சிகிச்சை முறையானது டாப்சோன், ரிஃபாம்பிசின் மற்றும் க்ளோஃபாசிமைன் ஆகிய மூன்று மருந்துகளைக் கொண்டு உள்ளது.
  • இந்த மருந்து கலவை MDT என குறிப்பிடப்படுகிறது.
  • தொழுநோய் என்பது மைக்கோபாக்டீரியம் லெப்ரே பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நாள்பட்ட தொற்று நோயாகும்.
  • இலவசமாக வழங்கப்படும் MDT மருந்து ஆனது நிப்பான் அறக்கட்டளையினால் 2000 ஆம் ஆண்டு முதல் நிதியளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்