கடந்த 30 ஆண்டுகளாக தோடா எருமைகளின் எண்ணிக்கை சுமார் 90 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது.
இது தோடா பழங்குடியினரின் கலாச்சாரத்துடன் நன்கு இணைக்கப்பட்ட ஒரு பூர்வீக நீர் எருமை இனமாகும்.
தோடா பழங்குடியினர் தமிழ்நாட்டில் உயர் நீலகிரி பீடபூமியில் வசிக்கின்ற மிகவும் பழமையான திராவிட இனக் குழுக்களில் ஒருவர் ஆவர்.
ஒரு புதிய முன்னெடுப்பாக, நீலகிரியில் உள்ள சாண்டினல்லாவில் உள்ள செம்மறி ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஆனது, மலைகளில் உள்ள இந்த எண்ணிக்கையை மீண்டும் நன்கு நிலை நிறுத்த உதவச் செய்யம் வகையில் ஒரு காப்பினப் பெருக்கத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த எருமைகளின் ஒரு எண்ணிக்கையானது, சில தசாப்தங்களுக்கு முன்பு நீலகிரி முழுவதும் 15,000 முதல் 20,000 வரை இருந்தது.