TNPSC Thervupettagam

தோரியம் அடிப்படையிலான திரவ உப்பினைக் குளிர்விப்பானாக கொண்ட அணுமின் நிலையம்

August 9 , 2024 106 days 147 0
  • கோபி பாலைவனத்தில் உலகிலேயே முதல் முறையாக தோரியம் அடிப்படையிலான திரவ உப்பினைக் குளிர்விப்பானாக கொண்ட அணுமின் நிலையத்தினை அடுத்த ஆண்டில் அமைக்க தொடங்க சீனா திட்டமிட்டுள்ளது.
  • இது திரவ உப்பு மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொண்ட கலவையினை வெப்பத்தை இடமாற்றவும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்துகிறது என்பதால் இந்த அணு உலையினைக் குளிரூட்டுவதற்கு தண்ணீர் தேவையில்லை.
  • சீனா 20,000 ஆண்டுகளுக்கு அதன் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான தோரியம் இருப்பினைக் கொண்டுள்ளது.
  • உலகிலேயே முதல் முறையாக தோரியம் அடிப்படையிலான திரவ உப்பு அணு உலை ஆனது 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் கட்டமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக இயக்கப்பட்டது.
  • அமெரிக்காவில் 93 அணுசக்தி உலைகள் உள்ளன என்ற நிலையில் இது சீனாவில் உள்ள 56 உலைகளின் எண்ணிக்கையினை விட கணிசமாக அதிகமாகும்.
  • தற்போது, ​​சீனா உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆண்டுக்கு ஆறு முதல் எட்டு அணு உலைகள் என்ற விகிதத்தில் அணு உலைகளை உருவாக்கி வருகிறது.
  • உண்மையில், 2035 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் மொத்த அணு உலைகளின் எண்ணிக்கையும் ஒரு சேர்ந்த எண்ணிக்கையினை மிஞ்சும் வகையில் சீனாவில் மேம்பட்ட அணு உலைகளின் எண்ணிக்கை 150 என்ற அளவினை எட்டுவதே சீனாவின் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்