பாரத் பயோடெக் குழுமத்தின் நிறுவனமான பயோவெட் என்ற நிறுவனம், பயோலம்பி வாக்சின் தோல் தடிப்பு நோயானது (LSD) தடுப்பூசிக்கான மத்திய மருந்து தரநிலைகள் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) உரிமத்தைப் பெற்றுள்ளது.
இது இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையுடன் (ICAR) இணைந்து உருவாக்கப்பட்டது.
இது கறவை மாடுகள் மற்றும் எருமைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இது LSD நோய்க்குத் தடுப்பூசி போடப்பட்ட விலங்குகளிலிருந்து (DIVA) பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பிரிப்பதற்கான முதல் உலகளாவிய குறிகாட்டி தடுப்பூசியாகும்.
இந்த தோல் தடிப்பு நோய் (LSD) ஆனது முதன்முதலில் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் ஒடிசா மாநிலத்தில் கண்டறியப்பட்டு பின்னர் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 20 மாநிலங்களுக்குப் பரவியது.
இந்த நோயானது கால்நடைகள் மற்றும் ஆசிய நீர் எருமைகளைப் பாதிக்கிறது.
பூச்சிகளால் பரவுகின்ற இந்த நோயானது, பால் உற்பத்தியில் மிகவும் குறிப்பிடத்தக்க குறைவினை ஏற்படுத்துகிறது.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஒரு பால் உற்பத்தியாளராக உள்ளது என்பதோடு இது உலகளாவிய பால் உற்பத்தியில் சுமார் 22 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினை அளிக்கிறது என்ற நிலையில் இந்தியாவினைத் தொடர்ந்து 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளன.