TNPSC Thervupettagam

தோல் தடிப்பு நோய்ப் பாதிப்பு உள்ள மாநிலம்

July 28 , 2023 358 days 241 0
  • நாகாலாந்து மாநிலமானது, தோல் தடிப்பு நோய்ப் பாதிப்பு (LDS) உள்ள மாநிலமாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது “2009 ஆம் ஆண்டு விலங்குகளில் தொற்றுநோய் மற்றும் பரவக்கூடிய நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்” படி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நோயானது, “நீத்லிங்” என்றும் அழைக்கப்படும் கேப்ரிபாக்ஸ் என்ற வைரஸால் ஏற்படுகிறது.
  • தோல் தடிப்பு நோய் என்பது கால்நடைகளில் ஒரு குறிப்பிடத்தக்கப் பாதிப்பினை ஏற்படுத்தும் பாக்ஸ் வைரஸ் நோயாகும்.
  • இந்த நோயில் இறப்பு விகிதம் பொதுவாகக் குறைவாக இருந்தாலும், கால்நடைகளின் உடல்நிலை இழப்பு, பால் உற்பத்திக் குறைதல், கருக்கலைவு, கருவுறாமை மற்றும் சேதமடைந்தத் தோல்கள் ஆகியவற்றால் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்