TNPSC Thervupettagam

தோல்புற்றுச் செல்களை கொல்வதற்கு தாவரச்சாறு

October 22 , 2017 2461 days 768 0
  • இந்திய மருந்துத் தாவரமான கடம்ப மரத்தினுடைய (அந்தோசெபாலஸ் கடம்பம்) பச்சையம் நிறைந்த உயிரி மூலக்கூறு சாற்றின் நானோதுகள் உருவாக்கமும் (Nano Particle Formulation) அருகாமை – அகச்சிவப்பு சாயமும் (Near – Infrared dye) இணைந்து தோல்புற்றுச்செல்களை தேர்ந்த வகையில் கொல்லப்படுவதை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களின் உருவாக்கத்தின் போது தாவரச்சாறானது புற்றுச் செல்களுக்கு நச்சாக விளங்குகிறது. அப்போது, ஒளிவெப்பச் சிகிச்சை (Photo thermal therapy) மூலமாக புற்றுச்செல்களை அழிப்பதற்கு சாயமானது உதவுகிறது.
  • அருகாமை – அகச்சிவப்பு ஒளியில் கதிர்வீச்சு செய்யப்படும் போது சாயம் வெப்பமடைகிறது. மேலும் பல்படிவ சவ்விலிருந்து சாறு வெளியேற்றத்தினை எளிதாக்குகிறது.
  • நான்கு அல்லது ஐந்து நிமிட கதிர்வீச்சு செய்யப்படுதலுக்கு பின்னர் 80 சதவிகித புற்றுச்செல்கள் கொல்லப்படுகின்றன.
  • ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியத்தொழில்நுட்ப நிறுவனங்களின் இரண்டு குழுக்களும் ஒன்றாக இணைந்து தோல்புற்றுச் செல்களைப் பயன்படுத்தி இந்த வெற்றியினை சாதித்துள்ளன.
ஒளி வெப்ப சிகிச்சை : (Photo thermal therapy)
  • புற்றுநோய் உட்பட பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு மின்காந்த கதிர்வீச்சினை (Electro Magnetic Radiation) பயன்படுத்தி சிகிச்சையளிக்கும் முறையே ஒளிவெப்ப சிகிச்சை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்