நாட்டில் முதல் மாநிலமாக கர்நாடகா தனது நகர ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையின் நாய்ப் படையில் பெல்ஜியன் மலிநோயிஸ் என்ற வகையைச் சார்ந்த இரண்டு நாய்களைக் கொண்டதாக உருவெடுத்து இருக்கின்றது.
இந்த குறிப்பிட்ட இனம் அமெரிக்கா உள்பட பிற நாட்டு காவல் படைகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது.
மற்ற இனங்களைக் காட்டிலும் இவை அதிக மோப்ப சக்தி கொண்டவை. ஆகவே அவை வெடிகுண்டு துப்பறிதல், கள்ளக் கடத்தலை கண்டறிதல் மற்றும் குற்றவியல் விசாரணைகள் ஆகியவற்றில் பயன்படுகின்றன.