நகரங்களில் காற்று மாசுபாடு மற்றும் சுகாதார நிலை அறிக்கை
August 22 , 2022 827 days 499 0
அமெரிக்காவின் ஹெல்த் எஃபெக்ட்ஸ் நிறுவனமானது காற்றின் தரம் குறித்த “நகரங்களில் காற்றின் தரம் மற்றும் சுகாதார நிலை” என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி, உலகின் பெரிய நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் பூமியிலேயே மிக மோசமான அளவில் காற்றின் தரத்தைக் கொண்டுள்ளன.
உலகெங்கிலும் உள்ள 7,000 நகரங்கள் மீதான காற்று மாசுபாடு மற்றும் உலகளாவிய சுகாதார விளைவுகள் பற்றிய விரிவான மற்றும் விளக்கமானப் பகுப்பாய்வினை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
இது நுண் துகள்கள் (PM2.5) மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) போன்ற இரண்டு தீங்கு விளைவிக்கும் மாசுக்கள் பற்றி கவனம் செலுத்துகிறது.
PM 2.5 அளவுகளை ஒப்பிடும் போது, மாசுபட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகியவை முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளன.
NO2 அளவுகளை ஒப்பிடும் போது, இந்தியாவின் எந்த நகரமும் மாசுபட்ட முதல் 10 அல்லது முதல் 20 நகரங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
பெய்ஜிங்கில் 100,000 நபர்களுக்கு 124 என்ற இறப்புகளுடன், PM 2.5 சார்ந்த நோயுடன் தொடர்புடைய மிகப்பெரிய அளவிலான நோய்ச் சுமை இருந்தது.
இதில் ஐந்து சீன நகரங்கள் முதல் 20 இடங்களில் இடம் பெற்றன.
இதில் 100,000 நபர்களுக்கு 106 இறப்புகளுடன் டெல்லி 6வது இடத்திலும், 99 இறப்புகளுடன் கொல்கத்தா 8வது இடத்திலும் உள்ளன.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு & மத்திய ஐரோப்பாவில் உள்ள நகரங்களில் மிகப்பெரிய சுகாதார பாதிப்புகள் காணப்படுகின்றன.
2050 ஆம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் சுமார் 68% பேர் நகர்ப்புறங்களில் வசிக்க வாய்ப்புள்ளது.