TNPSC Thervupettagam

நகரங்களில் காற்று மாசுபாடு மற்றும் சுகாதார நிலை அறிக்கை

August 22 , 2022 827 days 497 0
  • அமெரிக்காவின் ஹெல்த் எஃபெக்ட்ஸ் நிறுவனமானது காற்றின் தரம் குறித்த “நகரங்களில் காற்றின் தரம் மற்றும் சுகாதார நிலை” என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, உலகின் பெரிய நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் பூமியிலேயே மிக மோசமான அளவில் காற்றின் தரத்தைக் கொண்டுள்ளன.
  • உலகெங்கிலும் உள்ள 7,000 நகரங்கள் மீதான காற்று மாசுபாடு மற்றும் உலகளாவிய சுகாதார விளைவுகள் பற்றிய விரிவான மற்றும் விளக்கமானப் பகுப்பாய்வினை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
  • இது நுண் துகள்கள் (PM2.5) மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) போன்ற இரண்டு தீங்கு விளைவிக்கும் மாசுக்கள் பற்றி கவனம் செலுத்துகிறது.
  • PM 2.5 அளவுகளை ஒப்பிடும் போது, ​​மாசுபட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகியவை முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளன.
  • NO2 அளவுகளை ஒப்பிடும் போது, இந்தியாவின் ​​எந்த நகரமும் மாசுபட்ட முதல் 10 அல்லது முதல் 20 நகரங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
  • பெய்ஜிங்கில் 100,000 நபர்களுக்கு 124 என்ற இறப்புகளுடன், PM 2.5 சார்ந்த நோயுடன் தொடர்புடைய மிகப்பெரிய அளவிலான நோய்ச் சுமை இருந்தது.
  • இதில் ஐந்து சீன நகரங்கள் முதல் 20 இடங்களில் இடம் பெற்றன.
  • இதில் 100,000 நபர்களுக்கு 106 இறப்புகளுடன் டெல்லி 6வது இடத்திலும், 99 இறப்புகளுடன் கொல்கத்தா 8வது இடத்திலும் உள்ளன.
  • ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு & மத்திய ஐரோப்பாவில் உள்ள நகரங்களில் மிகப்பெரிய சுகாதார பாதிப்புகள் காணப்படுகின்றன.
  • 2050 ஆம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் சுமார் 68% பேர் நகர்ப்புறங்களில் வசிக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்