TNPSC Thervupettagam

நகரங்களுக்கான பசுமைக் குறியீட்டுத் தரவரிசை

April 17 , 2023 461 days 198 0
  • பசுமைக் குறியீடு மற்றும் பிற சுற்றுச்சூழல் அளவீடுகளின் அடிப்படையில் நகரங்களைத் தமிழக அரசு தரவரிசைப்படுத்த உள்ளது.
  • இதன் முக்கிய நோக்கம் அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள்தொகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கையாள்வது ஆகும்.
  • இது நகரங்களின்  காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவும், அதற்கு பயனுள்ளக் கொள்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளையும் வழங்குகிறது.
  • இந்தத் தரவரிசையானது சிறந்த அளவு மற்றும் தரமான குறிகாட்டிகளின் அடிப்படையில் இருக்கும்.
  • இது ஒரு நகரத்தின் தற்போதையச் சுற்றுச்சூழல் செயல்திறனையும் எதிர்காலத்தில் அதனை மேம்படுத்துவதற்கான  நோக்கங்களையும்  குறிக்கிறது.
  • இந்தத் தரவரிசையில் அதிக மதிப்பெண் பெறும் ஒரு நகரம், அந்த ஆண்டிற்கான கால நிலைத் தூதராக அங்கீகரிக்கப் படுகிறது.
  • நகர்ப்புற மக்கள் தொகையானது  2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 30.6% அதிகரித்து உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்