TNPSC Thervupettagam

நகரப் பகுதிகளில் வன வளங்களுக்கான உரிமைகள்

August 14 , 2021 1108 days 492 0
  • நகரப்பகுதிகளில், சமூக வன வளங்களுக்கான உரிமைகளை (Community Forest Resource Rights) அங்கீகரித்துள்ள முதல் மாநிலமாக சத்தீஸ்கர் மாறியுள்ளது.
  • 4,217 ஹெக்டேர் அளவிலான காடுகள் பரவியுள்ள தம்தாரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் உரிமைகளை அம்மாநில அரசு அங்கீகரித்துள்ளது.
  • 2006 ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டத்தின் கீழ், ஒட்டு மொத்தச் சமூகம் (அ) கிராமத்தினால் உபயோகிக்கப்படும் எந்தவொரு வன வளங்களையும் பாதுகாப்பதற்கும், புனரமைப்பதற்கும் (அ) அதன் வளங்களைக் காப்பதற்கும் (அ) பராமரிப்பதற்கும் வேண்டி கிராம சபைகளுக்கு சமூக வனவள உரிமைகளானது வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்