புவனேஸ்வரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் நகரங்களின் நகரமயமாக்கல் எவ்வாறு உள்ளூர் வெப்பநிலையை மிக வேகமாக அதிகரித்துள்ளது என்பது குறித்து ஆவணப்படுத்தியுள்ளனர்.
2001 – 2010 வரையிலான கால கட்டத்தில் கட்டாக் மற்றும் புவனேஸ்வரின் உள்ளூர் மேற்பரப்பு வெப்பநிலையானது 40-50 சதவிகிதம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
2001 – 2010 வரையிலான கால கட்டத்தில் ஒடிசாவில் உள்ள நகரங்களில் உள்ளூர் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதற்கு காரணம் நகரமயமாக்கல் மட்டுமே.
ஐ.நா. வாழ்விடம் (UN-HABITAT) என்ற அமைப்பின் அறிக்கையின்படி, புவியின் மேற்பரப்பில் 2 சதவீதத்திற்குக் குறைவான இடத்தினை உலக நகரங்கள் கொண்டுள்ளன. ஆனால் இவை 71 முதல் 76 சதவிகித பசுமை இல்ல வாயு உமிழ்விற்கு காரணமாக அமைகின்றன.