TNPSC Thervupettagam

நகரமயமாக்கல் மற்றும் இரவு நேர வெப்பமயமாதல்

June 2 , 2024 175 days 227 0
  • நகரமயமாக்கல் ஆனது 140க்கும் மேற்பட்ட முக்கிய இந்திய நகரங்களில் அவற்றைச் சுற்றியுள்ள நகரங்கள் அல்லாத பகுதிகளுடன் ஒப்பிடும்போது சுமார் 60 சதவீதம் அதிக இரவு நேர வெப்பமயமாதலுக்கு வழிவகுத்துள்ளது.
  • நகர்ப்புற வெப்ப தீவு (UHI) விளைவுக்கு நகரமயமாக்கல் காரணமாக இருப்பதாக அறியப் படுகிறது.
  • கற்காரை (கான்கிரீட்) மற்றும் கருங்காரை (சாலைகள் மற்றும் நடைபாதை) மேற் பரப்புகள் பகலில் வெப்பத்தைச் சேமித்து மாலையில் வெளியிடுவதால், அது இரவு நேர வெப்பநிலையை உயர்கிறது.
  • இந்தியா முழுவதும் உள்ள இந்த நகரங்களின் சராசரி நகர்ப்புற வெப்ப விளைவு கடந்த பத்தாண்டுகளில் 0.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானதாக கண்டறியப்பட்டது.
  • இது மொத்த நகர்ப்புற வெப்பமயமாதலில் 37.73 சதவீதம் ஆனது நகரமயமாக்கலுடன் தொடர்பு கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்போது, ​​இந்தியாவின் மக்கள்தொகையில் 36 சதவீதம், அதாவது சுமார் 40 கோடி பேர் நகர்ப்புறத்தில் உள்ளனர் என்ற நிலையில் இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் இரு மடங்காகி 80 கோடியாக உயரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்