TNPSC Thervupettagam

நகரா கட்டிடக் கலை பாணியில் கட்டமைக்கப்பட்ட இராமர் கோவில்

January 25 , 2024 309 days 289 0
  • அயோத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள இராமர் கோவில் சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • சந்திரகாந்த் சோம்புரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் ஆகியோர் நகரா கட்டிடக்கலை பாணியில் இந்தக் கோயிலை வடிவமைத்துள்ளனர்.
  • நகரா பாணி கோயில் கட்டிடக்கலை ஆனது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், குப்தர் காலத்தின் பிற்பகுதியில், வட இந்தியாவில் தோன்றியது.
  • நகரா பாணியிலான கோயில்கள் ஓர் உயரமான பீடத்தின் மீது கர்ப்பக் கிரகத்துடன் கூடிய (சன்னதி) வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • கர்ப்பக் கிரகத்தின் மேல் உயர்ந்து காணப்படும் ஷிகாரா ('மலை சிகரம்' எனப் பொருள் படும்) என்பது நகரா பாணிக் கோவில்களின் மிகவும் தனித்துவம் வாய்ந்த அம்சமாகும்.
  • ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள மிர்சாபூர் மற்றும் பன்சி-பாஹர்பூர் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து வரும் மணற்கற்களைப் பயன்படுத்தி இந்தக் கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கோயில் கட்டுமானத்தில் எஃகு அல்லது இரும்பின் பயன்பாடு தவிர்க்கப் பட்டு உள்ளது.
  • அதற்கு மாறாக, இது நாட்டின் உள்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்