TNPSC Thervupettagam

நகராட்சிச் சட்டம் ரத்து

April 22 , 2023 455 days 229 0
  • நாகாலாந்து அரசாங்கமானது 2001 ஆம் ஆண்டின் நாகாலாந்து நகராட்சிச் சட்டத்தினை சமீபத்தில் ரத்து செய்தது.
  • இது நாகாலாந்தின் 39 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) பெண்களுக்கென 33% இடங்களை ஒதுக்கி தேர்தல் நடத்த வேண்டுமென்ற மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பினை ரத்து செய்ய வழி வகுத்தது.
  • இந்திய அரசியலமைப்பின் 74வது சட்டத் திருத்தத்தின் IVவது சட்டப் பிரிவின் படி, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படாத ஒரே மாநிலம் நாகாலாந்து ஆகும்.
  • அங்குள்ள பெரும்பாலான பாரம்பரியப் பழங்குடியினர் மற்றும் பல்வேறு நகர்ப்புற அமைப்புகள் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றன.
  • அத்தகைய இடஒதுக்கீடுகளானது,  அரசியலமைப்பின் 371A என்ற சட்டப் பிரிவானது நாகலாந்து மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு விதிகளை மீறுவதாக அவர்கள் வாதிடச் செய்தனர்.
  • நாகா இனத்தவரின் சமயம் அல்லது சமூக நடைமுறைகள், நாகா மரபுச் சட்டம் மற்றும் செயல்முறை, நாகா மரபுச் சட்டத்தின்படி முடிவெடுக்கும் குடிமை மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம், நிலம் மற்றும் அதன் வளங்களின் உரிமை மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தின் எந்தச் சட்டமும் பொருந்தாது என்று இந்தச் சட்டப் பிரிவு கூறுகிறது.
  • நாகாலாந்து மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே உள்ளாட்சித் தேர்தல் ஆனது, 2004 ஆம் ஆண்டில் பெண்களுக்கன இட ஒதுக்கீடு இல்லாமல் நடைபெற்றது.
  • பின் அப்போதைய அம்மாநில அரசானது, 2001 ஆம் ஆண்டு மாநகராட்சிச் சட்டத்தில் 2006 ஆம் ஆண்டில் திருத்தம் ஒன்றை செய்து 74வது சட்டத் திருத்தத்திற்கு இணங்கப் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டினைச் சேர்த்தது.
  • 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான, அரசியலமைப்பின் 243T என்ற சட்டப் பிரிவிலிருந்து நாகாலாந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்தினை அம்மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்