TNPSC Thervupettagam

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்த CAG அறிக்கை

November 23 , 2024 17 hrs 0 min 47 0
  • 74வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஆனது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிமக்களுக்கு நேரடியாகவும் திறம்படவும் சேவைகளை வழங்க முடியும் என்பதால் அவற்றிற்கான அதிகாரப் பகிர்வைக் கட்டாயமாக்கியது.
  • பாராளுமன்றமானது அரசியலமைப்புச் சட்டத்தினைத் திருத்தியமைத்த சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், 18 மாநில அரசுகள் இதனை முழுமையாகச் செயல்படுத்த வில்லை.
  • 18 நகராட்சி செயல்பாடுகளில் 17 செயல்பாடுகள் ஆனது அரசியல் சட்டப்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULSGs) மாற்றப்பட்டுள்ளன.
  • ஆனால் நான்கு செயல்பாடுகள் மட்டுமே முழுமையான ஒரு சுயாட்சியுடன் திறம்பட வழங்கப் பட்டுள்ளன.
  • 14 மாநிலங்களில் சுமார் பத்து மாநிலங்கள் ஆனது, 16 காரணிகளுள் ஐந்திற்கும் மேற்பட்டவை தொடர்பாக ULSG அமைப்புகளின் மீது மேலாதிக்க அதிகாரங்களைக் கொண்டுள்ளன.
  • 17 மாநிலங்களில் உள்ள சுமார் 2,625 ULSG அமைப்புகளில் 1,600 அமைப்புகளில் செயல் பாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகள் இல்லை, மேலும் ஐந்து அமைப்புகளில் மட்டுமே மேயர்களை நேரடியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • 14 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் தங்கள் நகர சபை இடங்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டினை வழங்கியுள்ள நிலையில் இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டு உள்ள 33% இடஒதுக்கீடு வரம்பினை விஞ்சுகிறது.
  • 15 மாநிலங்களில் சுமார் நான்கு மாநிலங்கள் மட்டுமே தங்கள் மாநிலத் தேர்தல் ஆணையங்களுக்கு (SEC) வட்டார (பிரிவு) மறுசீரமைப்பிற்கு அதிகாரம் அளித்துள்ளன.
  • நகராட்சி அமைப்புகள் ஆனது, நிதிக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளை பெரிதும் சார்ந்துள்ளது.
  • சராசரியாக, ULSG அமைப்புகளின் மொத்த வருவாயில் சுமார் 32% மட்டுமே அவற்றின் சொந்த வருவாயாக இருந்தது.
  • அவற்றின் செலவினத்தில் சுமார் 29% மட்டுமே மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நலத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன.
  • அவற்றின் சராசரி வருவாய் ஆதார- செலவின இடைவெளியானது 42% ஆகும்.
  • சுமார் பத்து மாநிலங்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி மாநில நிதி ஆணையங்களை அமைத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்