நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான (UCB) இணையவழிப் பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வை (2020-2023)
September 30 , 2020 1520 days 505 0
இந்திய ரிசர்வ் வங்கியானது “UCBகளுக்கான (Urban Co-operative Banks) இணைய வழிப் பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வையை” (2020-2023) செயல்படுத்த இருக்கின்றது.
இது இணையவழித் தாக்குதல்களிலிருந்து அவ்வங்கிகளை மீட்பதற்காகவும் அவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பதற்காகவும் கண்டறிவதற்காகவும் எதிர்வினை ஆற்றுவதற்காகவும் வேண்டி UCBகளின் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆர்பிஐ ஆனது தனது 5 உத்திசார் அணுகுமுறையான “GUARD” என்பதைப் பயன்படுத்தி இந்த நோக்கத்தை அடையவுள்ளது.
“GUARD” என்பது பின்வருவனவற்றைக் குறிக்கின்றது.
G – ஆளுகை மேற்பார்வை (Governance Oversight)
U – பயனுள்ள தொழில்நுட்ப முதலீடு (Utile Technology Investment)
A – தேவையான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை (Appropriate Regulation and Supervision)
R – வலுவான ஒத்துழைப்பு (Robust Collaboration)
D – தேவையான தகவல் தொழில்நுட்ப, இணைய வழித் திறன்களை மேம்படுத்துதல். (Developing necessary IT, cybersecurity skills set)