'விரைவான, மெதுவான மற்றும் நெரிசல் மிக்க: செல்வ வளம் மிக்க மற்றும் ஏழ்மை நாடுகளில் நகர்ப்புறப் போக்குவரத்து' என்ற தலைப்பிலான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
நகரங்களில் இயங்கும் மோட்டார் வாகனங்களின் சராசரி பயண வேகத்தை இது மதிப்பிட்டது.
ஃப்லிண்ட் நகரத்தில் (அமெரிக்கா) நாள் முழுவதும் அதிகபட்ச சராசரி வேகம் பதிவாகி உள்ளது.
வங்காளதேச தலைநகரான டாக்கா, குறைவான சராசரி பயண வேகத்தைக் கொண்ட நகராக உள்ளது.
பொகோட்டா (கொலம்பியா) நெரிசல் மிக்க நகரமாகக் கண்டறியப் பட்டுள்ளது.
மெதுவான நெரிசலற்ற பயண வேகம் கொண்ட பத்து நகரங்களில் ஒன்பது நகரங்கள் வங்காளதேசம், இந்தியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன என்பதை அறிக்கை எடுத்துரைக்கிறது.
வேகக் குறியீட்டின் அடிப்படையில் உலகின் 20 மெதுவான பயண வேகம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிவாண்டி 5வது இடத்தைப் பெற்றுள்ளது.
கொல்கத்தா 6வது இடத்தையும், பீகாரில் உள்ள அர்ரா 7வது இடத்தினையும் பெற்று உள்ளன.
போக்குவரத்து நெரிசல் அளவீடுகளில், பெங்களூரு 8வது இடத்திலும், மும்பை 13வது இடத்திலும், டெல்லி 20வது இடத்திலும் உள்ளன.