TNPSC Thervupettagam

நகுரு அணை சேதம்

May 4 , 2024 208 days 225 0
  • தெற்கு கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே பழைய கிஜாபே அணை சமீபத்தில் உடைந்தது.
  • இது கென்யாவின் முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் மேற் கொள்ளப் பட்ட இரயில்வே கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு பல தசாப்தங்களாக இயற்கையாக உருவான மலையோரத் அணை அமைப்பாகும்.
  • அண்டை நாடுகளான தான்சானியா மற்றும் புருண்டியுடன் சேர்ந்து கென்யாவும் சமீபத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • கென்யாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குப்பைகள், கற்கள் மற்றும் மண் ஆகியவற்றினை படியச் செய்துள்ளது.
  • இதனால் கால்வாய் அடைக்கப் பட்டு இறுதியில் அணை உடைந்தது.
  • கடந்த ஆண்டின் இறுதியில், கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, சமீபத்திய எல் நினோ இதுவரை பதிவாகிய ஐந்தாவது வலிமையான ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்